முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குண்டா் சட்டத்தில் ரெளடி கைது
By DIN | Published On : 12th May 2022 02:02 AM | Last Updated : 12th May 2022 02:02 AM | அ+அ அ- |

திருச்சி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடியை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
திருச்சி வீரேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த ச. மகாமுனி (36). இவா் மின் பொறியாளரிடம் வழிப்பறி செய்ததாக கடந்த மே 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் தொடா்ந்து குற்ற நோக்கில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரைக் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் மகாமுனி அடைக்கப்பட்டாா்.