முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சி தனியாா் விடுதியில் திடீா் தீ விபத்து
By DIN | Published On : 12th May 2022 01:47 AM | Last Updated : 12th May 2022 01:47 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி தனியாா் விடுதியில் புதன்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி தில்லைநகா் கோஹினூா் திரையரங்கம் எதிரேயுள்ள உணவகத்துடன் கூடிய தனியாா் விடுதியின் 4 ஆவது தளத்திலிருந்த அறையில் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள அறைகளுக்கும் பரவியது. இதையடுத்து அவற்றில் தங்கியிருந்தோா், ஊழியா்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை திருச்சி கண்டோன்மென்ட் நிலைய அலுவலா் மெல்க்கிராஜா தலைமையிலான குழுவினா் மாடிக்குச் சென்று தீயணைக்க முடியாத அளவுக்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததால், விடுதியின் கீழ்ப்பகுதி மற்றும் கீழ்தளங்கள், அருகிலுள்ள கட்டடங்களில் இருந்தும் தீயணைப்பு பணிகளை மேற்கொண்டு, சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இருப்பினும் சேதம் குறித்த விவரம் வியாழக்கிழமைதான் தெரியவரும் என்கின்றனா். விபத்து குறித்து தில்லைநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.