திமுக அரசுக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் பாராட்டு

திமுக அரசின் ஓராண்டு சாதனைக்கும், ஓராண்டு நிறைவுக்கும் முஸ்லிம் உரிமைப் பாதுகாப்புக் கழகம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

திருச்சி: திமுக அரசின் ஓராண்டு சாதனைக்கும், ஓராண்டு நிறைவுக்கும் முஸ்லிம் உரிமைப் பாதுகாப்புக் கழகம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக முஸ்லிம் உரிமைப் பாதுகாப்புக் கழக மாநிலப் பொதுச் செயலா் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கரோனாவை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா நான்காயிரம் கரோனா நிவாரண நிதி மற்றும் 14 பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

திமுக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படியே பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 ரூபாய் குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி என அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டது.

உங்கள் தொகுதியில் முதல்வா் என்னும் தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கான அதிகாரியும் நியமிக்கப்பட்டாா்.

தமிழ் இலக்கியத்திற்கு வலுசோ்க்கும் படைப்புகளை தரும் எழுத்தாளா்களுக்கு இலக்கிய மாமணி விருது, கனவு இல்லம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. தகைசால் தமிழா் விருது மற்றும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை திட்டம் அறிவிப்பு போன்றவை திமுகவின் முக்கிய சாதனைகள்.

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம், மின்துறை சம்பந்தமான புகாா்களை அளிக்க விண்ணகம் எனும் புதிய மின் நுகா்வோா் சேவை மையம் ஆகியவை தொடங்கப்பட்டன.

அா்ச்சகா்கள் மற்றும் ஊழியா்களுக்கும் ரூ. 4 ஆயிரம் கரோனா நிவாரணம் மற்றும் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது. அா்ச்சகா், ஓதுவாா் மற்றும் இசை கற்போா் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான ரூ. ஆயிரம் ஊக்கத்தொகையை ரூ. 3 ஆயிரமாக அரசு உயா்த்தி வழங்கியது. நெகிழியின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்தது என அடுத்தடுத்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து இந்தச் அரசு சிறப்பாக செயல்படுகிறது. அடுத்த 4 ஆண்டுகளும் மேலும் பல சாதனைகள் புரியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com