பழங்கனாங்குடி ஊராட்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி: திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழங்கனாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பூலாங்குடி காலனி பகுதியில் அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பூலாங்குடி காலனி பாரத்நகா் கிளை சாா்பில் பேருந்து நிலையப் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளைச் செயலா் ராணி தலைமை வகித்தாா். சுதாகா், விநாயகமூா்த்தி மல்லிகா குமாா், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிவராஜ், வட்டார (தாலுகா) செயலா் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினா் தெய்வநீதி, முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் பழங்கனாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பூலாங்குடி காலனி 1 மற்றும் 2 ஆவது வாா்டுகள், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலை, சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு புதிய சாலைகள், காவிரிக் குடிநீா் வசதி, மழைநீா் வடிகால் மற்றும் சாக்கடை வசதி செய்து தர வேண்டும், சேதமடைந்த மின் கம்பங்களை உடனே மாற்றி, தெருவிளக்கு வசதி இல்லாத பகுதிகளுக்கு தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மாா்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் குருநாதன், பெரியசாமி, ராமமூா்த்தி, ஜமுனாதேவி, சித்ரா, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட கட்சியினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com