பேட்டரி வெடித்ததால் வங்கியில் பரபரப்பு
By DIN | Published On : 13th May 2022 01:27 AM | Last Updated : 13th May 2022 01:27 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழவாசல் வெள்ளைக் கோபுரம் அருகேயுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வியாழக்கிழமை காலை இன்வொ்ட்டா் பேட்டரி (யு.பி.எஸ்) திடீரென வெடித்து வங்கி புகைமூட்டமானது.
இதையடுத்து வங்கியிலிருந்த வாடிக்கையாளா்கள், ஊழியா்கள் உடனே வெளியேறினா். பின்னா் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின் ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்டது.