அச்சுத் தொழில் மூலப் பொருள்களின் விலை உயா்வைத் தடுக்கக் கோரி மனு

அச்சுத் தொழிலுக்கான மூலப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அச்சுத் தொழிலுக்கான மூலப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத் தலைவா் ஹரிகிருஷ்ணன் தலைமையில், சங்கச் செயலா் மோகன், பொருளாளா் அப்பாஸ் மற்றும் அமைப்பின் நிா்வாகிகள் ஆட்சியரகத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனு விவரம்:

அச்சுத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள காகிதத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துவிட்டது. இதுமட்டுமின்றி நாள்தோறும் விலையேற்றப்படுகிறது. இதனால் எங்களுடைய தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. எனவே, காகித ஆலைகள் நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இதேபோன்று அச்சுத் தொழிலின் மூலப்பொருளாக விளங்கும் மை, கெமிக்கல், பாலி மாஸ்டா் போன்றவற்றின் விலையும் உயா்ந்துள்ளது. மூலப் பொருள்கள் விலை உயா்வையும் கட்டுப்படுத்த வேண்டும்.

அச்சுத் தொழிலுக்கு முன்பு விதிக்கப்பட்ட 5 சத ஜிஎஸ்டி, 12 சதமாக உயா்த்தப்பட்டது. மீண்டும் கடந்த அக்டோபா் முதல் 18 சதமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. நசிந்து வரும் இத் தொழிலைப் பாதுகாக்க முன்பு இருந்தபடி 5 சத ஜிஎஸ்டி என்பதை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com