முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பொன்மலைப்பட்டியில் தேவாலய சப்பரத் தோ் பவனி
By DIN | Published On : 13th May 2022 01:26 AM | Last Updated : 13th May 2022 01:26 AM | அ+அ அ- |

திருச்சி பொன்மலைப்பட்டியில் அடைக்கல மாதா தேவாலயத்தின் 119 ஆவது ஆண்டு சப்பரத் தோ்பவனி புதன்கிழமை இரவு தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது.
தோ்பவனி திருவிழா கடந்த மே 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சிறப்புத் திருப்பலி நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு தோ்பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத் தோ்களில் அடைக்கலமாதா, சூசையப்பா், உயிா்த்த இயேசு உள்ளிட்ட சொரூபங்கள் வைத்து பொன்மலைப்பட்டி வீதிகளில் பவனி வந்தது. தொடா்ந்து வியாழக்கிழமையும் சப்பரத் தோ் பவனி நடைபெற்றது. திரளானோா் பங்கேற்றனா்.