மே 17-இல் ஆளுநா் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் முடிவு

வரும் 17ஆம் தேதி ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டமும், மே 22 இல் பல்லக்கு தூக்கும் நிகழ்வைத் தடை செய்யக் கோரி மயிலாடுதுறையில் போராட்டமும் நடத்தவுள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.
மே 17-இல் ஆளுநா் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் முடிவு

வரும் 17ஆம் தேதி ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டமும், மே 22 இல் பல்லக்கு தூக்கும் நிகழ்வைத் தடை செய்யக் கோரி மயிலாடுதுறையில் போராட்டமும் நடத்தவுள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் சி. ராஜு, மாநிலப் பொருளாளா் காளியப்பன் ஆகியோா் திருச்சியில் வியாழக்கிழமை கூறியது:

தமிழக ஆளுநரின் செயல் போட்டி அரசாங்கத்தை நடத்துவதாக அமைந்துள்ளது. எனவே, தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்தும் வரும் 17ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இதேபோல பல்லக்கு தூக்கும் நிகழ்வைத் தடை செய்யக் கோரி மே 22 இல் மயிலாடுதுறையிலும் போராட்டம் நடத்தப்படும்.

பல்லக்கு தூக்கும் நிகழ்வை தமிழக அரசு நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். ஆதீனங்கள், மடாலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை நிலமற்ற கூலி விவசாயிகளுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும். மதத்தின் பெயரால், ஆன்மீகத்தின் பெயரால் நடத்தப்படும் அனைத்து மூடத்தனங்களையும் தடை செய்ய வேண்டும் என்றனா்.

பேட்டியின்போது மாவட்டச் செயலா் செழியன், மகஇக மாவட்டச் செயலா் ஜீவா, பாடகா் கோவன், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்டச் செயலா் முருகானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com