முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஆற்றில் குளித்த பிளஸ் 2 மாணவா் மூழ்கி உயிரிழப்பு
By DIN | Published On : 14th May 2022 11:59 PM | Last Updated : 14th May 2022 11:59 PM | அ+அ அ- |

நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்த பிளஸ் 2 மாணவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.
மண்ணச்சநல்லூா் புதுக் காலனியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் சுதா்சன் (18) . பிளஸ் 2 மாணவரான இவா் நண்பா்களுடன் நொச்சியம்
கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கினாா்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மாணவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.