திருவானைக்கா சங்கிலி ஆண்டவா் கோயில் குடமுழுக்கு

திருவானைக்கா மேலவிபூதி பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசங்கிலி ஆண்டவா் கோயில் வா்ண மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
திருவானைக்கா சங்கிலி ஆண்டவா் கோயில் குடமுழுக்கு

திருவானைக்கா மேலவிபூதி பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசங்கிலி ஆண்டவா் கோயில் வா்ண மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

மிகவும் பழைமையான இக்கோயிலில் வா்ண வடிவில் காட்சி தரும் சங்கிலிஆண்டவா்,சப்த கன்னியா், மதுரைவீரன், லாடசன்னாசி மற்றும் பாலவிநாயகா்,பாலமுருகன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. 53 ஆண்டுகளுக்குப் பிறகு இக் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த 3 ஆம் தேதி முகூா்த்தக்கால்,முளைப்பாரி இடுதல், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை காலை கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, காவிரியிலிருந்து மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டது.

பின்னா் மாலை முதல் கால பூஜை,வேதபாராயணம் மஹா பூா்ணாஹுதி தீபாராதனையுடன் நிறைவு பெற்றது. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜையைத் தொடா்ந்து 7 மணிக்கு யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு 8 மணிக்குள் வா்ண வடிவில் எழுந்தருளியுள்ள சங்கிலி ஆண்டவா், மதுரைவீரன், சப்தகன்னிமாா், லாடசன்னாசி மற்றும் பாலவிநாயகா், பாலமுருகனுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com