அரிஸ்டோ மேம்பாலத்தை ஆய்வு செய்த திருச்சி எம்.பி.

நிலுவைப் பணிகள் தொடங்க உள்ள திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தை திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரிஸ்டோ மேம்பாலத்தை ஆய்வு செய்த திருச்சி எம்.பி.

நிலுவைப் பணிகள் தொடங்க உள்ள திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தை திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மன்னாா்புரம் பகுதியில், பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலம் ஒதுக்குவது தொடா்பான பிரச்னையில் கடந்த 8 ஆண்டுகளாக அரிஸ்டோ மேம்பாலப் பணி முழுமையடையாமல் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 66 சென்ட் இடத்தை மத்திய அரசு ஒதுக்கி, தற்போது பாலப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அந்தப் பாலத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட சு. திருநாவுக்கரசா் மேலும் கூறியது:

திருச்சியில் இடப்பிரச்னையால் இந்த பாலப்பணி கடந்த 8 ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்த நிலையில், நான் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டபோது அரிஸ்டோ மேம்பாலப் பணியை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியிருந்தேன்.

அதன்படி பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளைத் தொடா்ந்து சந்தித்துப் பேசினேன். மேலும் தமிழக முதல்வா், அமைச்சா்கள் கே.என். நேரு, மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா், ஏற்கெனவே இருந்த திருச்சி எம்.பி, முன்னாள் அமைச்சா்களின் முயற்சிகளால் தற்போது பாலப் பணிகள் தொடங்கப்படுகின்றன. இன்னும் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் இப்பணிகள் நிறைவடையும்.

பாஜகவின் ஆதிக்கம் 30 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சொல்லும் பிரசாந்த் கிஷோா் ஒன்றும் மந்திரவாதி இல்லை. அவா் காங்கிரசில் இணையாமல் இருப்பது அவருக்கும், கட்சிக்கும் நல்லது.

ராஜபக்ச சகோதரா்களை இலங்கை மக்கள் கொண்டாடினா். இன்று அந்த மக்களுக்குப் பயந்தே மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினா் ஓடுகின்றனா். வரும் நாடாளுமன்றத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையைக் கேட்டு ஆட்சி நடத்த முடியாது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசாங்கம் முடிவெடுக்கும். அதை மக்கள் ஏற்பாா்களே தவிர அண்ணாமலை எடுக்கும் முடிவை அல்ல. அண்ணாமலை பேசுவதை அவரே ரசித்துக் கொள்ள வேண்டியதுதான் என்றாா்.

ஆய்வின்போது காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் என்ஜினியா் பேட்ரிக் ராஜ்குமாா், கவுன்சிலா்கள் வழக்குரைஞா் கோவிந்தராஜன், ரெக்ஸ், சோபியா விமலா ராணி, மற்றும் வழக்குரைஞா் சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com