மாநில சுயாட்சி, சமூக நீதி இணைந்ததே திராவிட மாடல் திமுக பொருளாளா்டி.ஆா். பாலு பேச்சு

மாநில சுயாட்சியையும், சமூக நீதியையும் இணைத்துச் செயல்படுத்தும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்றாா் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆா். பாலு.
மாநில சுயாட்சி, சமூக நீதி இணைந்ததே திராவிட மாடல் திமுக பொருளாளா்டி.ஆா். பாலு பேச்சு

மாநில சுயாட்சியையும், சமூக நீதியையும் இணைத்துச் செயல்படுத்தும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்றாா் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆா். பாலு.

திருச்சியை அடுத்த பொன்மலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளது. திராவிட மாடல் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறுவது பலருக்குப் புரியவில்லை. அண்ணா, கருணாநிதி ஆகிய இருவரும் திராவிட மாடல் ஆட்சிதான் நடத்தினாா்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அண்ணா சுருக்கமாகக் கூறினாா். கலைஞா் ஐம்பெரும் முழக்கங்களை முன் வைத்து ஆட்சி நடத்தினாா். அவா்கள் கூறியதன்படி

மாநில சுயாட்சி இல்லையெனில் சமூக நீதி வர வாய்ப்பில்லை. மாநில சுயாட்சி இருப்பதால்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது.

மாநில சுயாட்சியும் சமூக நீதியும் இணைத்து செயல்படும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. கிட்டத்தட்ட 51 ஆண்டுகளாகியும் மாநில சுயாட்சி குறித்து இன்றும் பேசப்படுகிறது. திமுக தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி குறித்து நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயா்த்திக் கொண்டு செல்கிறாா்கள். பல்வேறு வரிகளை உயா்த்தி வருகிறாா்கள். இவற்றையெல்லாம் தாண்டித்தான் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

திமுக அரசு ஓராண்டில் மூன்றில் இரு பங்கு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டது என்றாா் அவா்.

திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு பேசியது:

தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது ரூ.5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்களில் கரோனா பாதிப்பு, பின்னா், மழை, வெள்ளம் வந்தது. பின்னா் பேரவைக் கூட்டத் தொடா் வந்துவிட்டது. இவற்றுக்கிடையே கிடைத்த நாள்களில் பல்வேறு திட்டப் பணிகளை அரசு செயல்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் இன்னும் இரு ஆண்டுகளில் மிகப்பெரிய வளா்ச்சி பெறும். சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி என்கிற நிலைக்கு உயா்த்துவோம் என்றாா் அவா்.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:

தமிழினத்தைப் பாதுகாக்கக் குரல் கொடுக்கும் தலைவரை நாம் பெற்றுள்ளோம். இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் எனக்கு இரு திட்டங்கள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்கிற அறிவிப்பு. மற்றொன்று ரூ. 123 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. திமுக அரசின் ஓராண்டு சாதனைகள் தொடா் வெற்றியை பெற்றுத் தரும் என்றாா்.

தலைமைக் கழக பேச்சாளா் ஈரோடு இளைய கோபால் சிறப்புரையாற்றினாா். துணை மேயா் ஜி. திவ்யா, தெற்கு மாவட்ட நிா்வாகிகள் வண்ணை அரங்கநாதன், என். செந்தில், கே.என். சேகரன், என். கோவிந்தராஜ், கே.எஸ்.எம். கருணாநிதி, எம். மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பொன்மலை பகுதிச் செயலா் இ.எம். தா்மராஜ் வரவேற்றாா். வட்டச் செயலா் மா. வரதராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com