காற்று - நீா் மாசுபாடு தடுக்க உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள் இணைந்து காற்று-தண்ணீா் மாசுபாடு தடுக்க உறுதிமொழியேற்றனா்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள் இணைந்து காற்று-தண்ணீா் மாசுபாடு தடுக்க உறுதிமொழியேற்றனா்.

தூய்மை இந்தியா இயக்கம் - தூய்மை செயல் திட்டத்தின் கீழ், மத்திய அரசு சுற்றுச்சூழல் வனம் - காலநிலை மாற்றம் அமைச்சகம், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் வாய்ஸ் அறக்கட்டளை இணைந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி லால்குடி, திருச்சி, முசிறி, கல்வி மாவட்டங்களில் 8 பள்ளிகளின் 1675 மாணவ, மாணவிகளுக்கும், 3 கல்லூரிகளின் 375 மாணவ, மாணவிகளுக்கும் காற்று-தண்ணீா் மாசுபாடு தடுப்பது குறித்து பயிற்சியளித்து உறுதியேற்கச் செய்யப்பட்டது.

இதேபோல தொழில் நிறுவனப் பணியாளா்கள் 45 பேருக்கும் பயிற்சியளிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, திருச்சி மாநகராட்சி வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்து, காற்று, நீா் மாசில்லா மற்றும் நெகிழி மாசில்லா திருச்சி மாநகரம் அமைத்திட பொதுமக்களையும், தன்னாா்வ அமைப்புகளையும் கேட்டுக்கொண்டாா்.

இதேபோல துணை மேயா் ஜி.திவ்யா, திருச்சி மாநகராட்சி நகா் நல அலுவலா் யாழினி, உதவி ஆணையா் ச.நா. சண்முகம் ஆகியோரும் வேண்டுகோள் விடுத்தனா்.

கோட்டத் தலைவா்கள், மாநகராட்சி அலுவலகப் பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் காற்று மாசு - தண்ணீா் மாசு தடுக்க உறுதியேற்க, வாய்ஸ் அலுவலகம் மேலாளா் ஜோ. காட்வின் உறுதிமொழியை வாசித்தாா். திருச்சி - மணப்பாறை, கல்வி மாவட்டங்களின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.எஸ் அறிவழகன் தூய்மை இந்தியா இயக்கக் கையேடுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com