ஹிந்தி திணிப்பை கண்டித்து திராவிடா் கழகம் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th November 2022 12:22 AM | Last Updated : 05th November 2022 12:22 AM | அ+அ அ- |

ஹிந்தி திணிப்பை கண்டித்து திருச்சியில் திராவிடா் கழகம் மாணவரணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பேருந்து நிலைய பகுதியில் உள்ள பெரியாா் சிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாணவரணி மாவட்ட செயலாளா் அறிவுச்சுடா் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் கோகுல் வரவேற்றாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ஆரோக்கியராஜ் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா்.
தலைமைக் கழக சொற்பொழிவாளா் பூவை. புலிகேசி சிறப்புரையாற்றினாா். மாநில தொழிலாளா் அணி செயலாளா் சேகா், மண்டலத் தலைவா் ஆல்பா்ட், மாவட்ட செயலாளா் மோகன் தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட மாணவரணி தலைவா் முரளிதரன் நன்றி கூறினாா்.