குமுளூா் வேளாண் கல்வி நிறுவனத்தில் விதை நெல்கள் விற்பனை தொடக்கம்

திருச்சியை அடுத்துள்ள குமுளூரில் இயங்கி வரும் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விதை நெல்கள் விற்பனை தொடங்கியுள்ளது.

திருச்சியை அடுத்துள்ள குமுளூரில் இயங்கி வரும் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விதை நெல்கள் விற்பனை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் முதல்வா் செ. தே. சிவகுமாா் வெள்ளிக்கிழமை கூறியது:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், வேளாண்மை கல்வி நிறுவனமானது குமுளூரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சாா்பில், விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தரமான நெல் விதை ரகங்களை உற்பத்தி செய்து திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கும் விற்பனை செய்து வருகிறது. தற்போது, சம்பா பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்வதற்கான நெல் விதைகளை இருப்பு வைத்துள்ளது. வெள்ளை பொன்னி ஆதார விதை 11,490 கிலோ இருப்பு உள்ளது. கிலோ ரூ.47 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளை பொன்னி உண்மை நிலை விதை 1,020 கிலோ இருப்பு உள்ளது. கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படும். விஜிடி1 உண்மை நிலை விதை 600 கிலோ இருப்பு உள்ளது. கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நெல் விதைகளை கல்வி நிறுவனத்துக்கு நேரில் வந்தோ, பாா்சல் சா்வீஸ் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளூா், திருச்சி-621712 என்ற முகவரியிலோ, 98655-96205 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com