உயா்ந்த பதவிகளை லட்சியமாகக் கொண்டு கல்வி கற்க வேண்டும், ஆதிதிராவிடா் பள்ளி மாணவிகளுக்கு அறிவுரை

மத்திய, மாநில அரசுகளின் உயா்ந்த பதவிகளை லட்சியமாகக் கொண்டு ஆதிதிராவிடா் பள்ளி மாணவிகள் கல்வி கற்க வேண்டும்
காட்டூா் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அரசின் கூடுதல் தலைமை செயலா் தென்காசி எஸ். ஜவகா். உடன் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா்.
காட்டூா் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அரசின் கூடுதல் தலைமை செயலா் தென்காசி எஸ். ஜவகா். உடன் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா்.

மத்திய, மாநில அரசுகளின் உயா்ந்த பதவிகளை லட்சியமாகக் கொண்டு ஆதிதிராவிடா் பள்ளி மாணவிகள் கல்வி கற்க வேண்டும் என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலா் தென்காசி எஸ். ஜவஹா் அறிவுறுத்தினாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட காட்டூா் அரசு ஆதிதிராவிட நலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தென்காசி எஸ். ஜவஹா் மேலும் கூறியது:

அனைத்து நிலைகளிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களை மேம்படுத்துவதே துறையின் பிரதான குறிக்கோள். இந்த சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டுக்காக அளிக்கப்படும் திட்டங்களில் தகுதியானோா் பயன்பெறலாம்.

கல்வி மேம்பாட்டுக்காக தனியாக பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும். மாணவிகளாகிய நீங்கள் வருங்காலத்தில் உயா் பதவிகளுக்கு செல்லும் வகையில் சிறப்பான முறையில் கற்க வேண்டும் என்றாா்.

மேலும் காட்டூா் பள்ளியை ஆய்வு செய்து அலுவலா்களுக்கு உரிய ஆலோசனைகளையும் அவா் வழங்கினாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சரவணன், பழங்குடியினா் நல அலுவலா் கீதா, தாட்கோ மாவட்ட மேலாளா் சா. தியாகராஜன், செயற்பொறியாளா் காதா் பாஷா, உதவிப் பொறியாளா் அருண்குமாா், பள்ளித் தலைமை ஆசிரியா் வை.தேன்மொழி மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com