தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் கருத்தரங்கம்

தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (தன்னாட்சி) மின்னாற்றல் சேமிப்பு மற்றும் நிலையான மின்னாற்றல் உற்பத்தி திறன் நோக்கிய செயல்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (தன்னாட்சி) மின்னாற்றல் சேமிப்பு மற்றும் நிலையான மின்னாற்றல் உற்பத்தி திறன் நோக்கிய செயல்பாடு குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் எனா்ஜிகிளப் அசோசியேசன் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கொங்குநாடு கல்வி நிறுவனத் தலைவா் பிஎஸ்கே. பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அசோகன், டீன் யோகப்பிரியா, மின்னணுவியல் துறைத் தலைவா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில் சென்னை ரெமோன்சொல்யூசன் தொழிற்சாலையின் இயக்குநா் சீனிவாசமோகன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். மின்னனுவியல் துறை மாணவி சுரேகா வரவேற்றாா், மின்னணு மற்றும் தகவல் தொடா்புத் துறை மூன்றாமாண்டு மாணவா் முகமதுசித்திக் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com