திருச்சி -புதுகை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் ஆய்வு

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், சாலைப் பாதுகாப்புக் குழுத் தலைவருமான மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் தேசிய நெடுஞ்சாலைக் கோட்டப் பொறியாளா்கள் எஸ். சேதுபதி, கேசவன் உள்ளிட்டோா்.
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் தேசிய நெடுஞ்சாலைக் கோட்டப் பொறியாளா்கள் எஸ். சேதுபதி, கேசவன் உள்ளிட்டோா்.

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், சாலைப் பாதுகாப்புக் குழுத் தலைவருமான மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியிலிருந்து மாத்தூா் வரை சுமாா் 12 கி.மீ. தொலைவுக்கு சாலையை அகலப்படுத்தும் பணிகள் ரூ. 67.95 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைத் துறையால் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய பணிகளை 2023 ஜனவரிக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சாலையின் இருபுறமும் சுமாா் 8 அடி தாா்ச் சாலையாகவும், 4 அடி மண் சாலையாகவும் அகலப்படுத்தப்பட்டு, மழைநீா் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்படுகிறது. மேலும் சாலை அகலமாக உள்ள இடங்களில் அணுகு சாலையும், வாகன நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.

இப் பணிகளை மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுத் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான மா. பிரதீப்குமாா், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, குறிப்பிட்ட இடைவெளியில் சாலை மையத் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டிய முறைகள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்து, விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா்கள் எஸ். சேதுபதி, கேசவன் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு), வடிவேல் ( நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள்), மதியழகன் சாலை (பாதுகாப்பு), திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா். குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நிலுவை வழக்குகளால் பணிகளில் சுணக்கம்

இந்த விரிவாக்கப் பணியின்போது மத்திய சிறை அருகிலுள்ள எம்ஜிஆா் நகா், கொட்டப்பட்டு பகுதியிலுள்ள இந்திராநகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம், அரசுப் புறம்போக்கு நிலத்தில் இருந்த குடியிருப்புகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சில அமைப்புகள் சாா்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்கின்றனா் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com