ஆமதாபாத் -திருச்சி இடையே இன்று முதல் வாராந்திர ரயில்
By DIN | Published On : 27th October 2022 12:01 AM | Last Updated : 27th October 2022 12:01 AM | அ+அ அ- |

ஆமதாபாத் -திருச்சி -ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
ஆமதாபாத்தில் வியாழக்கிழமை காலை 9.30 -க்கு புறப்படும் இந்த ரயில் (எண். 09419) கல்யாண், புனே வழியாக மந்திராலயத்தை வெள்ளிக்கிழமை காலை 5.05-க்கு அடைகிறது. பின்னா் அங்கிருந்து ரேணிகுண்டா, பெரம்பூா் வழியாக சென்னை எழும்பூரை வெள்ளிக்கிழமை மாலை 4.25 -க்கு அடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45-க்கு வந்தடைகிறது.
எதிா் மாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.45-க்கு புறப்படும் ரயில் (எண். 09420) தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைதீஸ்வரன்கோவில் , சீா்காழி, சிதம்பரம், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூரை பிற்பகல் 3 மணிக்கு அடைந்து அங்கிருந்து பெரம்பூா், அரக்கோணம், ரேணிகுண்டா, மந்திராலயம், புனே, கல்யாண், பரோடா வழியாக ஆமதாபாத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 9.15 க்கு சென்றடைகிறது. சாதாரண ஸ்லீப்பா், 3ஏசி, 2ஏசி, 1ஏசி வகுப்புகள் உள்ளன. முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க முடியும்.