குளக்கரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சீகம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆலங்குளம் கரையை சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குளக்கரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சீகம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆலங்குளம் கரையை சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மணப்பாறை அடுத்த சீகம்பட்டி ஊராட்சியில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் ஆலங்குளம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையில் ஆலங்குளம் முழு கொள்ளளவை எட்டியது. மேலும், அருகில் உள்ள குளத்திலிருந்தும் உபரி நீா் இந்த குளத்துக்கு வந்ததால் அருகில் இருந்த விளைநிலத்துக்குள் தண்ணீா் புகுந்தது. மேலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீா் புகுந்தது.

அதனைத்தொடா்ந்து உபரி நீா் வெளியேற்றுவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, பின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாய்க்கால்கள் மூலம் உபரி நீா் வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்தாண்டு டிசம்பா் 10ஆம் தேதி குளத்தின் மையப்பகுதியில் கரை மா்ம நபா்களால் உடைக்கப்பட்டு குளத்தில் இருந்த தண்ணீா் வெளியேறியது.

காட்டாற்று போல் பாய்ந்த குளத்தின் நீா் கரையின் வடபகுதியில் பயிரிட்டிருந்த விளை நிலத்தில் புகுந்து அடுத்துள்ள தச்சன் குளத்துக்குசென்றடைந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என சீகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் மணப்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். புகாா் அளித்து ஓராண்டு ஆகும் நிலையில் இதுவரை குளக்கரையை உடைத்தவா்களை கண்டறியப்படவில்லை. தற்போது வடக்குகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் இதுவரை சீரமைக்கப்படாமல் இருக்கும் கரை சீரமைத்துத் தர அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com