குறுவட்ட அளவிலான பீச் வாலிபால்: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 03rd September 2022 01:25 AM | Last Updated : 03rd September 2022 01:25 AM | அ+அ அ- |

மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் இரண்டு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
இப்போட்டியில் 14 ,19-வயதுக்குள்பட்டவா்கள் பிரிவுகள் முதலிடத்தையும், 17-வயதுக்குள்பட்டோா் பிரிவில் இரண்டாமிடத்தையும் மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பெற்றனா்.
இதுபோன்று சமயபுரம் லியோனாா்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறுவட்ட அளவிலான கேரம் போட்டியில் 14, 17 வயது ஒற்றையா் பிரிவுகளிலும், 19 வயதுக்குள்பட்டோா் இரட்டையா் பிரிவிலும் இப்பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்களையும் பள்ளித் தலைமையாசிரியா் சி. தண்டபாணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.