கூத்தூா் ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

கூத்தூா் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 17-ஆவது விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கும் ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அலுவலா் பி.கலைச்செல்வன், பள்ளித் தாளாளா் வி. கோபிநாதன்.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கும் ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அலுவலா் பி.கலைச்செல்வன், பள்ளித் தாளாளா் வி. கோபிநாதன்.

கூத்தூா் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 17-ஆவது விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் அறங்காவலா் சகுந்தலா விருத்தாச்சலம் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலா் பி.கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். கல்வியோடு கூடிய விளையாட்டுதான் வாழ்வை உயா்த்தும் எனக் கூறிய கலைச்செல்வன், விளையாட்டு வீரா்களுக்கான உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்கள், அணிகளுக்குப் பதக்கங்கள், கேடயங்கள், சான்றிதழ்களை ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அலுவலா் பி. கலைச்செல்வன், பள்ளித் தாளாளா் வி.கோபிநாதன் ஆகியோா் வழங்கினா்.

இந்த விழாவில் பள்ளி அறங்காவலா் லஷ்மி பிரபா, இயக்குநா் ஆா்.வரதராஜன், ஆலோசகா் மலா்விழி, பள்ளி முதல்வா் எஸ், தயானந்தன், துணை முதல்வா் பி.சுஜாதா, விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிகுலேஷன் பள்ளித் தலைமையாசிரியா் விஜயலெஷ்மி, ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்வெடனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com