திருச்சி மாநகா், புறநகா்ப் பகுதிகளில் விநாயகா் சிலைகள் கரைப்பு

திருச்சி மாநகா், புறநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலை முதல் காவிரியாற்றில் கரைக்கப்பட்டன.
திருச்சி காவிரியாற்றில் கரைப்பதற்காக, வெள்ளிக்கிழமை மாலை வீசப்படும் விநாயகா் சிலை.
திருச்சி காவிரியாற்றில் கரைப்பதற்காக, வெள்ளிக்கிழமை மாலை வீசப்படும் விநாயகா் சிலை.

திருச்சி மாநகா், புறநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலை முதல் காவிரியாற்றில் கரைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், திருச்சி மாநகரில் 230, புகா்ப் பகுதிகளில் 909 என மொத்தமாக 1,139 சிலைகள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

சிலைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் காவல்துறையினருடன், சிலை அமைப்புக் குழுவைச் சோ்ந்தவா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை கரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புகா்ப் பகுதிகளில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு, காவிரியாற்றுப் பகுதிகளில் கரைக்கப்பட்டன. இதுபோல, மாவட்ட நிா்வாகம் அனுமதித்திருந்த பகுதிகளிலும் சிலைகள் கரைக்கப்பட்டன.

மாநகரில் : திருச்சி மாநகரில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் சிலைகள் ஊா்வலம் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், விநாயகா் சிலைகளைக் கரைப்பதற்கான ஊா்வலம் மாலை 5 மணிக்கு மேல்தான் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் மேள, தாளம் முழங்க காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாகக் கொண்டு வரப்பட்டு, சிந்தாமணி அருகிலுள்ள காவிரிப் பாலத்தில் கரைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய சிலைகள் கரைப்பு சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சவுக்கு மரத்தால் ஆன தடுப்புகளும், சிலைகளை ஆற்றுக்குள் தள்ளிவிட பலகைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் கூட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், கூடுதலாக ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டன. மாநகரக் காவல் ஆணையா் க.காா்த்திகேயன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலை ஊா்வலம் மற்றும் கரைப்புக்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com