மாற்றுத்திறனாளி அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு இ-ஷ்ரம் பதிவு செய்ய சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளி அமைப்புசாரா தொழிலாளா்ளுக்கான இ-ஷ்ரம் (ஒருங்கிணைந்த இணைய வழி அட்டை) பதிவு செய்ய, திருச்சி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மாற்றுத்திறனாளி அமைப்புசாரா தொழிலாளா்ளுக்கான இ-ஷ்ரம் (ஒருங்கிணைந்த இணைய வழி அட்டை) பதிவு செய்ய, திருச்சி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளா் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, ஒன்றியம் வாரியாக மாற்றுத்திறனாளி அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான இ-ஷ்ரம் பதிவுக்கான சிறப்பு முகாம்களை நடத்தவுள்ளன.

முகாம் நடைபெறும் தேதி, ஒன்றியம் என்ற அடிப்படையில் விவரம்:

செப்டம்பா் 6- துறையூா், 7- முசிறி, 8-திருவெறும்பூா், 9- தொட்டியம், 14- மணப்பாறை, 15- மருங்காபுரி, 20- உப்பிலியபுரம்,21-தா.பேட்டை. இந்த முகாம்கள் வட்டார வாழ்வாதார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

செப்டம்பா் 13- ஆம் தேதி திருச்சி கிழக்குப் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு மரக்கடை சையது முா்துஷா மேல்நிலைப் பள்ளியிலும், 22-ஆம் தேதி மேற்குப் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு ராமலிங்கநகா் ஸ்பாஸ்டிக் சொசைட்டியிலும் முகாம் நடைபெறும்.

இந்த முகாமுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆதாா் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டகைப்பேசி எண், வங்கிக்கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும்.

ஏற்கெனவே அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான நலவாரிய அட்டை வைத்திருந்தாலும், இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்தி, அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com