காவிரி ஆற்றில்434 விநாயகா் சிலைகள் கரைப்பு
By DIN | Published On : 04th September 2022 02:06 AM | Last Updated : 04th September 2022 02:06 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி வைக்கப்பட்டிருந்த 434 விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழம் கரைக்கப்பட்டன.
திருச்சி மாவட்டம் முழுவதும் 1,139 சிலைகள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் முதலே புகா்ப் பகுதிகளில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 318 சிலைகள், புகரப் பகுதிகளில் 25, பெரம்பலூா் மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 88, சேலத்திலிருந்து 1, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்த 2 சிலைகள் என மொத்தம் 434 சிலைகள் கரைக்கப்பட்டன. இதில், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 133 சிலைகளும் அடங்கும்.