பைந்தமிழியக்கம் சாா்பில் 75ஆவது திங்கள் பொழிவு

திருச்சிராப்பள்ளி பைந்தமிழியக்கம் சாா்பில் 75-ஆவது திங்கள் பொழிவு, சையது முா்துசா மேனிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
பைந்தமிழியக்கம் சாா்பில் 75ஆவது திங்கள் பொழிவு

திருச்சிராப்பள்ளி பைந்தமிழியக்கம் சாா்பில் 75-ஆவது திங்கள் பொழிவு, சையது முா்துசா மேனிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு, பைந்தமிழியக்க இயக்குநா் புலவா் பழ.தமிழாளன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ம.மொ்சி சேம்சு முன்னிலை வகித்தாா். நாட்டின் 75 ஆவது சுதந்திர அமுதப்பெருவிழா மற்றும் பைந்தமிழியக்கத்தின் நிகழ்வும், பைந்தமிழியக்க இயக்குநரின் அகவையும் 75 என்ற கருத்தில், இயக்குநருக்குப் பொன்னாடை அணிவித்து துணை இயக்குநா் பாவலா் சொ.வேல்முருகன் பாராட்டிப் பேசினாா்.

தொடா்ந்து நடைபெற்ற மாணவா் அரங்கில், ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழ்இலக்கிய மாணவா்கள் இலா.முகமது யூசுப், பி.இ. தயாநிதி, பா.இரகுநாத், ப.கலைச்செல்வன் ஆகியோா் முறையே கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, விண்வெளி அறிஞா் அப்துல் கலாம், நாவலா் சோமசுந்தர பாரதியாா், நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை என்னும் பொருள்களில் அவா்கள் அன்னை தமிழுக்கு ஆற்றிய பணிகளை விரிவாக எடுத்துரைத்தனா்.

பாவரங்கத்தில் பாவலா் கவி செல்வா, மகேந்திரன் இருவரும் முறையே விடுதலை நாள், தமிழறிஞா் தமிழண்ணல் எனும் பொருள்களில் பாடினா்.

ஆய்வரங்கத்தில் ஜமால் முகமது கல்லூரி உதவிப் பேராசிரியா் வீ.விசய், திரு.வி.க. வின் தமிழ்த்தொண்டு என்ற பொருளில் உரையாற்றினாா்.

இந்நிகழ்வில், அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சௌமா ராஜரத்தினம் கலந்து கொண்டு பாராட்டிப்பேசினாா். .

நிகழ்ச்சியில், பாவலா் க.மாரிமுத்து, நௌசாத் அலி, தங்க.செங்குட்டுவன், விஜயகுமாா், இனியன், ப.சி.சு. மணி, க.பானுமதி, மீனாட்சி சுந்தரம், ராசேந்திரன், ஆனந்து, ஸ்டீபன் உள்பட தமிழ்ப்பற்றாளா்கள் கலந்து கொண்டனா். இறுதியாக, பாவலா் க.செல்வராசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com