விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக். பள்ளிஆண்டு விளையாட்டு விழா
By DIN | Published On : 04th September 2022 02:09 AM | Last Updated : 04th September 2022 02:09 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரத்திலுள்ள விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சா்வதேச கைப்பந்து விளையாட்டு வீரரும், இந்திய கைப்பந்துக் கழக இணைச் செயலருமான ஜெ. நடராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு (படம்) பரிசுகளை வழங்கினாா்.
இந்த விழாவில் கல்விக்குழும அறக்கட்டளைத் தலைவா்
சகுந்தலா விருத்தாச்சலம், பள்ளித் தலைவா் வி.கோபிநாதன், அறங்காவலா் லட்சுமிபிரபா, இயக்குநா் ஆா். வரதராஜன்,
கல்வி ஆலோசகா் மலா்விழி, முதல்வா் விஜயலட்சுமி, நிா்வாக அலுவலா் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆனந்த், நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.