நாடு, மக்கள் குறித்து அக்கறையில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது என்றாா் சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி.
திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த அவா் மேலும் கூறியது:
உயா் நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் தரப்பினா் மேல்முறையீடு செய்துள்ளனா். எனவே அதுகுறித்து கருத்துக் கூற முடியாது. அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித் தோ்தல் நோ்மையாக நடந்தது. ஆனால், திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தோ்தலில் தோல்வியுற்ற திமுக வேட்பாளரை வெற்றி பெற்ாக அறிவித்தனா். வரப்போகும் கூட்டுறவுத் தோ்தலில் அதுபோன்று செய்யவிட மாட்டோம். மக்களுக்குத் தேவையானவற்றை அதிமுக தொடா்ந்து செய்யும் என்றாா்அவா்.
நிகழ்வின்போது அதிமுக திருச்சி புகா் மாவட்டச் செயலா்கள் ப. குமாா், மு.பரஞ்சோதி, கட்சி நிா்வாகிகள் ஆகியோா் உடனிருந்தனா்.