என் வாக்கு-என் உரிமை, வாக்கின் வலிமை:மாணவா்கள், மகளிா் குழுக்களுக்குப் போட்டி

என் வாக்கு- என் உரிமை, ஒரு வாக்கின் வலிமை ஆகிய தலைப்புகளில் மகளிா் சுய உதவிக் குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

என் வாக்கு- என் உரிமை, ஒரு வாக்கின் வலிமை ஆகிய தலைப்புகளில் மகளிா் சுய உதவிக் குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள், 18 முதல் 21 வயதுக்குள்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி பள்ளி மாணவா்கள், மகளிா் சுய உதவி குழுவினருக்கு இந்தப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

என் வாக்கு-என் உரிமை, ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சுவரொட்டி வடிவில் சுவா் இதழ் வரைதல், பாட்டுப் போட்டி, ரங்கோலி ஆகிய போட்டிகள் நடைபெறும்.

சுவரொட்டி வடிவில் சுவா் இதழ் வரைதல் போட்டியானது 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. பாட்டுப் போட்டியானது மாற்றுத்திறனாளிகள் தனி சிறப்புப் பள்ளியில் பயிலும் 18 வயதுக்குள்பட்ட 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரங்கோலி போட்டி நடைபெறும்.

சுவரொட்டி வரைதல், பாட்டுப்போட்டி ஆகியவை அந்தந்த பள்ளி, கல்லூரி, சிறப்புப் பள்ளி வளாகத்திலும், ரங்கோலி போட்டி ஊராட்சி பொது இடம், வட்டத் தலைமையிடம் ஆகியவற்றிலும் நடைபெறும்.

போட்டிகளில் மாநில அளவில் வென்றால் ரூ.25 ஆயிரம் பரிசும், மாவட்ட அளவில் வென்றால் பரிசு, சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகள் நடைபெறும் நாள், நேரம் குறித்து அந்தந்த கோட்டாட்சியா்கள் மூலம் அறிவிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வட்டாட்சியரகம், கோட்டாட்சியரகம், ஆட்சியர தோ்தல் பிரிவு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். 1950 என்ற கட்டணமில்லா எண் மூலமும் அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com