அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டுவண்டி பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற மாட்டுவண்டியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற மாட்டுவண்டியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றபோது காடுவெட்டி காவிரிப் பகுதி ஆற்றங்கரையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவா் தப்பினாா். இதையடுத்து போலீஸாா் அரை யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்,.

விசாரணையில் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவா் காடுவெட்டி அருகிலுள்ள கீழவழிக்காடு ப. தா்மராஜ் ( 21) எனத் தெரிய வந்தது. இதையடுத்து காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com