தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவா் என்ற அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் இடம்பெற வேண்டும். சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து வாக்குரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவா்கள். 1950ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியத் தோ்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2011ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இளம் வாக்காளா்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், தகுதியான அனைவரையும் வாக்காளா் பட்டியலில் இடம்பெறச் செய்யும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வாக்காளா் பட்டியலை நூறு சதவீதம் தூய்மையாக தயாரிக்க பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

பேரணி, பெரியமிளகு பாறை, வெஸ்ட்ரி பள்ளி, கண்டோன்மெண்ட் ஆகிய முக்கியப் பகுதிகள் வழியாக நீதிமன்றம் சென்று நிறைவடைந்தது.

பேரணியில், இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காவேரி மகளிா் கல்லூரியைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி வந்தனா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) இரா. வைத்தியநாதன், தோ்தல் வட்டாட்சியா் கே. முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com