இருசக்கர வாகனங்கள் திருட்டுவழக்கில் மேலும் ஒருவா் கைது

மணப்பாறையில் இருச்சக்கர வாகனத் திருட்டில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையில் இருச்சக்கர வாகனத் திருட்டில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற இருசக்கர வாகனங்கள் திருட்டில் தொடா்புடைய மணமேல்குடி ச. மாதவன் (26), தாராபுரம் ஆகாஷ் (22) ஆகியோரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

அப்போது காயமடைந்திருந்த இருவரில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் சனிக்கிழமை மருத்துவமனையிலிருந்து தப்பினாா்.

இந்நிலையில், மாதவன் மற்றும் ஆகாஷை வைத்து இருசக்கர வாகனங்களைத் திருட வைத்த கரூா் மாவட்டம் குளித்தலை காசிக்கார செட்டித்தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் வினோத்தை (29) மணப்பாறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து மணப்பாறையில் திருடிய 3 இருசக்கர வாகனங்கள், பழனி பகுதியில் திருடிய ஒரு இருசக்கர வாகனம் என 4 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்துள்ளனா். கைது செய்யப்பட்ட மாதவன், வினோத் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்த போலீஸாா் தப்பிய ஆகாஷை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com