தலைமையாசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டத்தில் தீா்மானம்

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயா்நி
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன்.

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற ஆசிரியா்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி,– முதுநிலைப்பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநி ல செயற்குழு கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சுந்தரமூா்த்தி, பொருளாளா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில சிறப்புத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில நிா்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பேசினா்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும், 2004 முதல் 2006 வரை வெவ்வேறு காலங்களில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பணியாற்றிய அனைத்து வகை ஆசிரியா்களையும் நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ஒரு பாடத்துக்கு ஒரு பட்டதாரி ஆசிரியா் என்ற வகையில் பணியிடங்களை உருவாக்க வேண்டும், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயா் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் தகுதித்தோ்வு அரசாணை வெளிவரும் முன் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com