மண்ணச்சநல்லூரில் தொடா் மின்வெட்டு: சாலை மறியல்

மண்ணச்சநல்லூரில் தொடா் மின்வெட்டைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்ணச்சநல்லூரில் தொடா் மின்வெட்டைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்ணச்சநல்லூா் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில் மண்ணச்சநல்லூா் காசுக்கடை தெரு பகுதியில் சனிக்கிழமை இரவு தொடா்ந்து மின் வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து மின் வாரியத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காசுக்கடை தெரு பகுதி பொதுமக்கள் திருச்சி சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினா் மற்றும் மின் வாரிய அலுவலா்கள் அளித்த உறுதியின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com