மின்சாரக் கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரிக்கை

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று திருச்சி மாவட்ட வியாபாரக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று திருச்சி மாவட்ட வியாபாரக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ஜே.ஜே.எல்.ஞானராஜ் தலைமையில் நிா்வாகிகள் தெரிவித்தது:

கரோனா பாதித்த நேரத்தில் வணிக நிறுவனங்களும், சிறு குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மின் கட்டண உயா்வு வியாபாரிகளுக்குத் துயரமாகி விடும்.

எனவே தமிழக அரசு இந்த மின் கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண கணக்கீடு இரு மாதங்களுக்கு ஒருமுறை என்பதை மாற்றி மாதந்தோறும் கணக்கிட வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com