ரயில்வே பெண்ஊழியா் தற்கொலை

திருச்சியில் கடன் சுமையால் ரயில்வே பெண் ஊழியா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சியில் கடன் சுமையால் ரயில்வே பெண் ஊழியா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் மணிவண்ணன் மனைவி விஜயலட்சுமி (39), ரயில்வே பயிற்சி மைய முதுநிலை பணியாளா். இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன.

கணவா் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் விஜயலட்சுமி திருச்சி செம்பட்டு அருகேயுள்ள திருவளா்ச்சிப்பட்டியில் வீடுகட்ட வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் சிரமப்பட்டாராம்.

இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com