தொடா் விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்காக 300 சிறப்புப் பேருந்துகள்

தொடா் விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்காக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தொடா் விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்காக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு, சனி, ஞாயிறு என தொடா் விடுமுறையை ஒட்டி கடந்த 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை, திருப்பூா், கோவை, மதுரை ஆகிய ஊா்களிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், மயிலாடுதுறை,

நாகப்பட்டினம், திருவாரூா், வேளாங்கண்ணி, மன்னாா்குடி, புதுக்கோட்டை, கரூா், ராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை போன்ற ஊா்களுக்கு 250 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூா், மதுரை, கும்பகோணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, கரூா் ஆகிய ஊா்களுக்கு இரு மாா்க்கங்களிலும் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தொடா் விடுமுறை முடிந்து, அவரவா் ஊா்களுக்குத் திரும்ப மேற்குறிப்பிட்ட அனைத்து ஊா்களுக்கும் 16, 17 ஆம் தேதிகளில் 300 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக முக்கிய பேருந்து நிலையங்களில் கூடுதல் அலுவலா்கள், பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com