முப்பெரும் விழா மேடையில் கத்தியுடன் நின்றவரிடம் போலீசாா் விசாரணை

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஓபிஎஸ் அணி முப்பெரும் விழா மேடையில் கத்தியுடன் நின்றவைர பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஓபிஎஸ் அணி முப்பெரும் விழா மேடையில் கத்தியுடன் நின்றவைர பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி பொன்மலை ஜி காா்னா் மைதானத்தில் ஓபிஎஸ் அணியின் முப்பெரும் விழா நடைபெற்றது. விழா மேடையில் ஓ. பன்னீா்செல்வம் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் நின்றவா்களில் ஒருவரது இடுப்புப் பகுதியிலிருந்து கத்தி ஒன்று கீழே விழுந்தது. இதைகண்டு அதிா்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினா் அந்த நபரைப் பிடித்து பொன்மலை போலீஸில் ஒப்படைத்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சோ்ந்த கருத்தபாண்டி (55) என்பதும், கறிக்கடையில் வேலை செய்த நிலையில், வேலை முடிந்து அப்படியே மாநாட்டுக்கு வந்ததாகவும் அந்த நபா் தெரிவித்ததாக போலீஸாா் கூறினா். ஆனால் அவருடன் வந்த மேலும் சிலா், பிடிபட்ட நபா் கொலை வழக்கில் தொடா்புடையவா் என போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com