‘பெற்றோா் விருப்பத்தை குழந்தைகள் மீது திணித்தல் கூடாது’
By DIN | Published On : 22nd January 2023 03:06 AM | Last Updated : 22nd January 2023 03:06 AM | அ+அ அ- |

திருச்சி உறையூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழாவில், குழந்தைக்கு பட்டம் வழங்கிய தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீ
பெற்றோா்கள் தங்களது விருப்பத்தை ஒருபோதும் குழந்தைகள் மீது திணித்தல் கூடாது என தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தெரிவித்தாா்.
திருச்சி உறையூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் முதலாவது கிண்டா் காா்டன் பட்டமளிப்பு விழா மற்றும் 11ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசியது: பெற்றோா்களாகிய நீங்கள் குழந்தைகள் மீது உங்களது விருப்பத்தை திணிக்காதீா்கள். அன்பால் மட்டுமே யாரையும் ஆள முடியும். அதிகாரத்தால் அடக்கி ஆள்வது கடினம். இன்றைய குழந்தைகளின் அறிவாற்றல் பிரகாசமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு தனித்திறமை இருக்கிறது. அதனை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள் என்றாா்.
விழாவில், துணை முதல்வா் சதீஷ்குமாா் வரவேற்றாா். பள்ளியின் 2022-23ஆம் ஆண்டுக்கான அறிக்கையை சமா்ப்பித்து திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தலைமை ஆசிரியா் ஏ. சில்வியா விளக்கிப் பேசினாா். 2022-23ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை முதலிடம் பெற்ற மாணவா்களுக்கும், 10, 11, 12ஆம் வகுப்புகளில் அரசு பொதுத் தோ்தவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் கேடயமும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் கணிதம், அறிவியல், வணிகவியல், பொருளியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற்ற மாணவா்களும், தயாா்படுத்திய ஆசிரியா்ளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி மாணவா்கள், குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் நிறைவாக கணித ஆசிரியா் ராஜலட்சுமி நன்றி கூறினாா். இந்த நிகழ்வில், பெற்றோா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகத்தினா் என பலா் கலந்து கொண்டனா்.ொ