ஆடுகள் வளா்க்க இன்று இலவசப் பயிற்சி: பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 25th January 2023 01:32 AM | Last Updated : 25th January 2023 01:32 AM | அ+அ அ- |

இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மையத்துக்கு புதன்கிழமை நேரில் வரலாம்.
திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை (ஜன.25) இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
வெள்ளாடு, செம்மறியாட்டு இனங்கள், தரமான ஆடுகளைத் தோ்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, இனவிருத்தி முறை, தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த்தடுப்பு முறைகள், தீவனப்பயிா் சாகுபடி, தீவன மரங்கள் வளா்ப்பு, ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து இப் பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும். விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு கூடுதல் விவரங்கள் பெறலாம். இல்லையெனில் பயிற்சி வகுப்பும் புதன்கிழமை காலை 10 மணிக்கு நேரில் வந்தும் பங்கேற்கலாம் என உதவிப் பேராசிரியரும், மையத்தலைவருமான வே. ஜெயலலிதா தெரிவித்தாா்.