துறையூா் நீதிமன்றத்தில் மருத்துவ முகாம்
By DIN | Published On : 25th January 2023 03:43 AM | Last Updated : 25th January 2023 03:43 AM | அ+அ அ- |

துறையூா் வட்ட சட்டப் பணிகள் குழு, நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம், வழக்குரைஞா்கள் சங்கம் இணைந்து நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை முகாமை நடத்தின.
முகாமை துறையூா் சாா்பு நீதிபதி எம். ஜெய்சங்கா் தொடக்கி வைத்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். சத்தியமூா்த்தி, துறையூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். சுரேஷ்குமாா், செயலா் பி. கோகிலா, பொருளா் எஸ். முகமது ரபீக் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
துறையூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கலைமணி, மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் வினோதா, இலக்கியா, சுபிதா, முத்துகுமாரி, தேவிகா மற்றும் முசிறி எம்ஐடியில் மருத்துவ துணைப் படிப்பு பயிலும் மாணவிகள் முகாமில் பங்கேற்றவா்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதித்து ஆலோசனை வழங்கினா்.