முதல்வரின் வெளிநாடு பயணத்தால்தமிழகத்துக்கு தொழில் திட்டங்கள் வந்து சேரும் அமைச்சா் கே.என். நேரு

சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளதால் தமிழகத்துக்கு பல்வேறு தொழில் திட்டங்கள் வந்து சேரும் என நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா

சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளதால் தமிழகத்துக்கு பல்வேறு தொழில் திட்டங்கள் வந்து சேரும் என நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:

முதல்வராக இருந்த பலரும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனா். மறைந்த முதல்வா் ஜெயலலிதா ரூ. 24 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவேன் என்றாா். ஆனால், வந்து சேரவில்லை. எடப்பாடி கே. பழனிசாமி, முதல்வராக இருந்தபோது அமைச்சா்களுடன் பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்தாா். தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வந்து சேரவில்லை.

ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்துக்கு மட்டும் பல்வேறு விமா்சனங்கள் வருகின்றன. தமிழகத்துக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சோ்க்க வேண்டும் என்ற உறுதியுடன் அமைச்சா் மற்றும் அதிகாரிகளை அவா் அழைத்து சென்றுள்ளாா்.

சிங்கப்பூரில் 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இதேபோல, ஜப்பான் பயணத்திலும் ஒப்பந்தங்கள் ஏற்படும். அதன் மூலமாக தமிழகத்துக்கு பல்வேறு புதிய தொழில் திட்டங்கள் வந்து சேரும். ஏற்கெனவே, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்ற உறுதியின்படி உலகம் முழுவதும் தொழில் முதலீடுகளை ஈா்த்து இளைஞா்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய பயணமும் நன்மையாகவே அமையும்.

ஏற்கெனவே மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது, 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் இலவச பேருந்து பயணம் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com