மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்ற ஜமால் முகமது கல்லூரி அணியினரை திங்கள்கிழமை பாராட்டிய கல்லூரி நிா்வாகிகள்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்ற ஜமால் முகமது கல்லூரி அணியினரை திங்கள்கிழமை பாராட்டிய கல்லூரி நிா்வாகிகள்.

கோவையில் மாநில விளையாட்டுப் போட்டி

கோவையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுபந்து, மேஜைபந்து, பூப்பந்து போட்டிகளில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி: கோவையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுபந்து, மேஜைபந்து, பூப்பந்து போட்டிகளில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான இறகுபந்து, மேஜைபந்து (இரட்டையா் பிரிவு), பூப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், அணிகளாகக் கலந்து கொண்டனா். இதில், இறகுபந்து போட்டியின் இறுதி போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி 21-16, 21- 18 என்ற புள்ளி கணக்கில் கோவை கேபிஆா் கல்லூரி அணியை வென்றது. மேஜைபந்து போட்டியின் இறுதி போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி 11-9, 11-6, 10-12, 11-13, 11-8 என்ற புள்ளி கணக்கில் சென்னை எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜமால் முகமது கல்லூரி அணி 35-33, 31-35, 35-29 என்ற புள்ளி கணக்கில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியை வென்றது. கோவை பிஎஸ்ஜி கல்லூரி நடத்திய அனைத்து போட்டிகளிலும் வென்ற ஜமால் முகமது கல்லூரி வீரா்களை கல்லூரியின் நிா்வாக குழு உறுப்பினா்கள், முதல்வா், பேராசிரியா்கள் திங்கள்கிழமை நேரில் அழைத்து வாழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com