பூனாம்பாளையத்தில் குடிநீா் வழங்க கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், பூனாம்பாளையம் கிராமத்தில் திங்கள்கிழமை குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், பூனாம்பாளையம் கிராமத்தில் திங்கள்கிழமை குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பூனாம்பாளையம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் திருச்சி - துறையூா் சாலையில் காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். தகவலறிந்து வந்த காவல்துறையினா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com