வையம்பட்டி ஒன்றியம் குளத்தூராம்பட்டியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல்.
வையம்பட்டி ஒன்றியம் குளத்தூராம்பட்டியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல்.

வையம்பட்டி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் கரூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எல். தங்கவேல் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் கரூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எல். தங்கவேல் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மணப்பாறையை அடுத்த வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளா் எல்.தங்கவேல் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். ஆணையூா், தவளைவீரன்பட்டி, என்.பூலாம்பட்டி, குளத்தூரம்பட்டி, வைரம்பட்டி, இளங்காகுறிச்சி, குமாரவாடி, ஆனாங்கரைப்பட்டி உள்ளிட்ட 64 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, ஒன்றியச் செயலாளா்கள் என்.சேது மற்றும் பி.வி.கே சி.பழனிச்சாமி, அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் ப.குமாா், முன்னாள் எம்.பி சின்னசாமி மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com