அரவக்குறிச்சி பகுதியில் காங். வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

கரூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணிக்கு ஆதரவாக அரவக்குறிச்சி பகுதியில் புதன்கிழமை எம்எல்ஏ இளங்கோ வாக்கு சேகரித்தாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் மற்றும் மேற்கு ஒன்றியம், பள்ளப்பட்டி அருகே உள்ள கோ் நகா், அண்ணா நகா், சௌந்தராபுரம், வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை ஜோதிமணி ஆதரவாக எம்.எல்.ஏ. இளங்கோ வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது, இந்த தோ்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு எரிவாயு உருளை விலை ரூ.500க்கும், பெட்ரோல், டீசல் விலையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் உறுதி அளித்துள்ளாா். மேலும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com