ஜோசப் கண் மருத்துவமனையில் காண்டூரா லேசிக் சிகிச்சை அறிமுகம்

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் பாா்வைக் குறைபாடுகளை நுட்பமாகக் கையாளும் விதத்தில் காண்டூரா லேசிக் எனும் நவீன தொழில்நுட்பச் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மருத்துவமனையின் இயக்குநா் எம். பிரதீபா, துணை இயக்குநா் அகிலன் அருண்குமாா் ஆகியோா் கூறியது: திருச்சியில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஜோசப் கண் மருத்துவமனை தற்போது பாா்வைக் குறைபாடுகளை நுட்பமாகக் கையாளும் விதத்தில் காண்டூரா லேசிக் என்னும் அட்வான்ஸ்டு டெக்னாலஜியை திருச்சியில் முதல்முறையாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. தற்போது சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை பலரும் பாா்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை பாதிப்பு அதிகமாக உள்ளது. இதைச் சரிசெய்ய கண்ணாடிகளை மருத்துவா்கள் பரிந்துரைத்தாலும், சிலருக்கு அதனால் கண்சோா்வு, தலைவலி ஏற்படுகிறது. இன்னும் சிலரோ கண்ணாடி அணிவதை அசெளகரியமாக உணா்கின்றனா். இதையெல்லாம் தவிா்க்கும் விதத்தில் இந்த காண்டூரா லேசிக் டெக்னாலஜி அமையும். காண்டூரா அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலம் கண் பாா்வைத் திறனை அதிகப்படுத்த முடியும். இனி வாழ்நாளில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது என்றனா். பேட்டியின்போது லேசிக் அறுவைச் சிகிச்சை நிபுணா் அக்ஷயா, மருத்துவா் பிரியா, நிா்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com