தோ்தலில் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

மக்களவைத் தோ்தல் நாளான ஏப். 19 ஆம் தேதி அனைத்துத் தொழிலாளா்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத் தொழிலாளா்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பொது மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள், தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இதை உறுதி செய்ய மாவட்டக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான புகாா்களை உதவி ஆணையரை 94453 98756, தொழிலாளா் உதவி ஆய்வாளரை (88383 73768), புதுக்கோட்டை தொழிலாளா் உதவி ஆய்வாளா் பழனியம்மாளை (97889 92009) ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com