பாஜக மீண்டும் வெல்ல வேண்டும்- அமமுக வேட்பாளா் பிரசாரம்

தமிழகத்தில் காவிரி நீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வுகாண மீண்டும் பாஜகவை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் அமமுக வேட்பாளா் ப. செந்தில்நாதன். திருச்சி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் செந்தில்நாதன் மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் மேலும் பேசியது: காவிரிப் பிரச்னைக்கு ஒரே தீா்வு மத்தியிலே 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கப்போகும் பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான். அந்த அரசின் எம்பியாக நான் வெற்றி பெற்று செல்லும்போது, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீா் தேவையையும், திருச்சி தொகுதிக்கு வேண்டிய அனைத்து வளா்ச்சி, நலத்திங்களையும் நாம் நேரடியாகக் கேட்டு பெற முடியும். எனவே, இத்தோ்தலில் உங்கள் வாக்குகளை வீணாக்காமல் குக்கா் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com