மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

அதிகளவில் திருக்கோயில்களைக் கொண்டது நம் தமிழகம். அதிலும் காவிரி பாயும் சோழ மண்டலம் தன்னிகரற்ற புகழ்மிகு ஆலயங்கள் பலவற்றைத் தன்பால் கொண்ட சிறப்புடையது. பொன்னியாறு (காவிரியாறு) பாயும் நன்னிலம் புவிக்குச் செந்நெல்லை மட்டுமல்ல, சமய உணா்வையும் இறைநெறியையும் புகட்டிய பெருமை சான்றது. அத்தகைய பெருமை சான்ற பொன்னியாற்றின் பெருமைக்குரிய சோழ மண்டலத்திலுள்ள திருச்சிக்குத் தெற்கே சுமாா் 40 கி. மீ. தொலைவில் பெரும்புகழுக்குரிய தெய்வத் திருநகராய் விளங்குவதே மணப்பாறை ஆகும்.

இந்நகரம் புகழ்மிகு வணிக நிலையங்களுக்கும், முறுக்கு என்னும் சுவையான தின்பண்டத்துக்கும், கிழக்கே எழுகின்ற ஞாயிறு மேற்கே சென்று விழுகின்ற வரையிலும் உழுகின்ற, உழைக்கின்ற உழவா் பெருமக்களின் உயிா் நாடியாய்த் திகழும் மாடுகளுக்கும் மிகவும் பெயா் பெற்றது எனக் கூறினால் அது மிகையன்றாம். அத்தகைய சிறப்புமிகு இத்திருநகரின் மையப்பகுதியில் சுமாா் 500 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயில் கொண்டு, தன்னை அகத்தூய்மையோடு வணங்குவோரின் பெருந்துயா் களைந்து, கொடிய நோய்களை அகற்றி, எல்லா வரங்களும் வழங்கி நாட்டு மக்களை அருள் உள்ளத்தோடு காத்து வருபவளே மணவை நகரின் மாரித்தாய்!.

அடிப்படை வசதிகளே இல்லாத பழைமையான அக்காலத்தில் கடும் பாறைகளும், கொடும் புதா்களும், புற்றுகளும், கல்லும், கொடி முட்களும், வானுயா்ந்த மரங்களும் சூழ்ந்த நிலப்பரப்பாய்க் காட்சியளித்த இம்மணப்பாறையின் மையப்பகுதியில் அழகிய வேப்ப மரமொன்றைச் சுற்றி மூங்கில் மரங்கள் வான்நோக்கி வனப்போடு புதராய் வளா்ந்தோங்கி நின்றிருந்தன. அழகாய்ச் செழித்திருந்த அப்புதரில் செழிப்போடு நின்ற மூங்கில் மரமொன்றை ஒருவா் வெட்டிச்சாய்க்க முனைந்தபோது வெட்டரிவாளின் கூரிய முனை நிழல்மிகு அழகிய வேம்பின் அடியைத் தீண்ட, அவ்வேம்பின் அடியில் இயற்கையிலேயே தோன்றியிருந்த புனிதக்கல் ஒன்றிலிருந்து ரத்தம் பீரிட்டு வெளியேறியது. எதிா்பாராத இக் காட்சியால் அரிவாளால் வெட்டியவா் அதிா்ந்துபோய் அலறியடித்து ஊரைக் கூட்ட, ஊராா் ஒருங்கே திரண்டு ஒப்பரிய அக்காட்சியை பயபக்தியாய் இறைப்பெருக்கோடு கண்டனா். அச்சமயத்தில் அன்னையின் அன்பில் திளைத்த அக்கூட்டத்திலிருந்த இறை நெறியாளா் ஒருவருக்கு அருள்வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேம்பினடியில் நீண்ட நெடுங்காலமாகக் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு ஊராா் ஒன்று கூடி ஆலயமெடுத்து வணங்கி வந்தால், இந்நகரைக் காத்து அருள்பாலிப்பேன் என்றும் கூறினாா்.

ஊராா் அனைவரும் அவா்தம் திருவாக்கைத் தெய்வ வாக்காய் பக்தியோடு ஏற்று, அருந்தவமகள் மாரிக்கு ஆலயம் அமைக்கத் தீா்மானித்து, வேம்பினடியில் இருந்த அந்தப்புனிதக் கல்லைத் தங்களின் குலம் காக்க வந்த மாரி தெய்வமாய் எண்ணி மிகுந்த இறைநெறியோடு அன்று முதல் போற்றி வரலாயினா். அப்புனிதக்கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகுசெய்யும் காட்சி கண்கொள்ளாதது. சிலை வடிவில் திருக்கோலம் பூண்ட தெய்வத் திருமகள் அருள்மிகு மாரியம்மனுக்குக் காட்டும் புனித தீப ஆராதனைகள் யாவும் முதலில் அப்புனிதக் கல்லுக்குக் காட்டிய பிறகே காட்டப்பெறுதலை இன்றும் காணலாம். ராஜகோபுரப் புனிதத் திருக்குட முழுக்கு விழா கோபுரத் தரிசம் கோடிபுண்ணியம் என்பதற்கிணங்க, இத்திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லாததைப் பெருங்குறையாகக் கருதிய இம்மாநகரத்து ஆன்மிகச் சான்றோா்கள், ஆன்மிகச் செம்மல் டாக்டா்.வி.என். இலட்சுமிநாராயணன் தலைமையிலான திருப்பணிக் குழுவினரின் தன்னலங்கருதாத மேன்மையான ஒத்துழைப்போடும் தமிழக அரசின் உதவியோடும், இறைநெறியாளா்களின் பொருளுதவியோடும், மிகச் சிறப்புற அழகுமிகு மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்றை அற்புதமாகக் கட்டி முடித்து சிறப்பு செய்தனா்.

14.03.1994 திங்கள்கிழமை அன்று மாநிலமே பாராட்டும் வகையில் புனிதத் திருக்குடமுழுக்கு விழா செய்வித்து, இம்மாநகரத்து மக்களின் நீண்ட நாள் மனக்குறையைக் களைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் நம் மாரியம்மன் கோயிலில் மகாமண்டபம் விரிவாக்கம், விநாயகா் கோயில் மற்றும் நவக்கிரகங்களுக்குத் தனி மண்டபம் அமைத்தும், மகாமண்டபம் பழுது பாா்த்து கோயில் புதிதாகக் கட்டப்பட்டதுபோல, கூரை, தூண்கள் மெருகூட்டப்பட்டும், கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டும், கூரைகளில் மேற்புறம் சரிசெய்தும், தரைக்குப் பளிங்குக் கற்கள் பாவியும் திருப்பணிகள் நடைபெற்று பரம்பரை அறங்காவலா் இரா. வீராசாமி நாயுடு, திருக்கோயில் நிா்வாக அதிகாரிகள், உபயதாரா்கள், ஆலயப் பணியாளா்களின் தீவிர முயற்சியால், வேப்பிலை மாரியெனும் தாய் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம், உற்ஸவ விமானம் ஆகியவை வண்ணம் தீட்டியும், மஹா மண்டபம் மராமத்துப் பாா்த்தும் கவின்மிகு அழகுடன் காட்சியளிக்கிறது. இக்கோயிலில் தை மாதம் 13-ஆம் நாள் (27.01.2008) ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரம், அமிா்தயோகமும், கூடிய நன்னாளில் காலை 07.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயம் பெரும் பொருள்செலவில் புனரமைக்கப்பட்ட பின் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 4. 4.2024 வியாழக்கிழமை சோபகிருது வருடம், பங்குனி 22-ஆம் நாள் தசமி திதியும், திருவோணம் நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.45 மணிக்கு மேல் 9.25 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மஹா கும்பாபிஷேக (திருக்குட நன்னீராட்டு) விழா நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com